/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/பெற்றோர் கண்ணெதிரே லாரி மோதி குழந்தை பலிபெற்றோர் கண்ணெதிரே லாரி மோதி குழந்தை பலி
பெற்றோர் கண்ணெதிரே லாரி மோதி குழந்தை பலி
பெற்றோர் கண்ணெதிரே லாரி மோதி குழந்தை பலி
பெற்றோர் கண்ணெதிரே லாரி மோதி குழந்தை பலி
ADDED : ஜூலை 16, 2024 01:57 AM
ஓசூர்: கர்நாடகா மாநிலம், பெங்களூரு அருகே நாகநாய்க்கனஹள்ளியை சேர்ந்த வர் தினேஷ், 31.
தனியார் கார்மென்ட்ஸ் நிறுவன மேற்பார்வையாளர்; இவர் மனைவி தனலட்சுமி, 28. இவர்களுக்கு மனிஷா, மோனிஷா என்ற, 9 மாத இரட்டை பெண் குழந்தைகள். நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, மனைவி மற்றும் மகள்களுடன், ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் பைக்கில் தினேஷ் ஓசூர் காளேகுண்டா பகுதிக்கு சென்றார். பெங்களூரு - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், ஓசூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனை சந்திப்பு அருகே, பின்னால் வந்த லாரி, பைக் மீது மோதியது.இதில், தாய் தனலட்சுமியின் மடியிலி ருந்த இரட்டை பெண் குழந்தைகளில், மனிஷா மட்டும் தவறி சாலையில் விழுந் தாள். அப்போது, அதிவேகமாக வந்த லாரி ஏறியதில், குழந்தை மனிஷா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தினேஷ், தனலட்சுமி, மற்றொரு பெண் குழந்தை மோனிஷா ஆகியோர் காயமின்றி தப்பினர். சிப்காட் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் விசாரிக்கிறார்.