/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 7வது சிறு பாசன கணக்கெடுப்பு துவக்கம் 7வது சிறு பாசன கணக்கெடுப்பு துவக்கம்
7வது சிறு பாசன கணக்கெடுப்பு துவக்கம்
7வது சிறு பாசன கணக்கெடுப்பு துவக்கம்
7வது சிறு பாசன கணக்கெடுப்பு துவக்கம்
ADDED : ஜூன் 01, 2025 01:18 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
இம் மாதம் துவங்கவுள்ள, 7வது சிறுபாசன கணக்கெடுப்பில், 2,000 ஹெக்டர் பரப்பளவுக்கு குறைவான பாசனம் பெறும் விவசாய நிலங்களில் அமைத்துள்ள நீராதாரங்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட வேண்டும். விவசாயிகள் தனியாகவோ, கூட்டாகவோ இணைந்து அமைத்துள்ள கிணறு, ஆழ்துளை கிணறுகளின் விபரம், பாசனம் பெறும் பரப்பு, பாசன வசதிக்கான செலவினங்கள், நிதி ஆதாரம் எந்த வகையில் பெறப்பட்டது, மானிய திட்டங்களை பயன்படுத்தியுள்ளனரா, நீர் எடுக்க பயன்படுத்தப்படும் மோட்டாரின் திறன் ஆகியவை பதிவு செய்யப்படும்.
மத்திய அரசின் இத்திட்டம் மூலம், சிறுபாசன பிரிவு சார்ந்த, தெளிவான புள்ளி விபரத்தொகுப்பு உருவாக்கப்பட்டு, நீர் மேலாண்மை திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளது.
கணக்கெடுப்பிற்கான மாவட்ட அளவிலான துணைக்குழுவில், கலெக்டர் தலைவராகவும், டி.ஆர்.ஓ., தொடர்பு அலுவலராகவும், புள்ளியியல் துணை இயக்குனர் ஒருங்கிணைப்பாளராகவும், தாசில்தார்கள் உறுப்பினர்களாகவும் வட்ட கணக்கெடுப்பு அலுவலர்களாகவும் இருப்பர். கணினி முறையில் உருவாக்கப்பட்ட செயலியில் எண்ம முறையில் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதால், அதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.