/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஓசூர் காயத்ரி அம்பாள் கோவிலில் 12ம் ஆண்டு வருஷாபிஷேக விழா ஓசூர் காயத்ரி அம்பாள் கோவிலில் 12ம் ஆண்டு வருஷாபிஷேக விழா
ஓசூர் காயத்ரி அம்பாள் கோவிலில் 12ம் ஆண்டு வருஷாபிஷேக விழா
ஓசூர் காயத்ரி அம்பாள் கோவிலில் 12ம் ஆண்டு வருஷாபிஷேக விழா
ஓசூர் காயத்ரி அம்பாள் கோவிலில் 12ம் ஆண்டு வருஷாபிஷேக விழா
ADDED : ஜூன் 01, 2025 01:18 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முல்லை நகரில் உள்ள காயத்ரி அம்பாள் கோவிலில், 12ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது. காலை, 8:30 முதல், நண்பகல், 12:45 மணி வரை சிறப்பு ஹோமம் நடந்தது. விநாயகர், காயத்ரி அம்பாள் மற்றும் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், காலபைரவர் உட்பட பல்வேறு சன்னதிகளில் அருள்
பாலிக்கும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, பூஜை நடந்தது.
திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மதியம், 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை, 6:30 மணிக்கு, கோவில் உட்பிரகாரத்தில்
உற்சவர் ஊர்வலம் நடந்தது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.