ADDED : ஜன 06, 2024 07:14 AM
போச்சம்பள்ளி : கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த குடிமேனஹள்ளியை சேர்ந்தவர் கலைச்செல்வி, 35.
இவர் நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு தனக்கு சொந்தமான ஹோண்டா ஆக்டிவா பைக்கில், கிருஷ்ணகிரியிலிருந்து தனது வீட்டிற்கு அகரம், மோட்டூர் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில் ஹெல்மெட் அணிந்து அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர், கலைச்செல்வி கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினார். நாகரசம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.