/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/இரட்டை கொலையில் 5 பேர் குண்டாஸில் கைதுஇரட்டை கொலையில் 5 பேர் குண்டாஸில் கைது
இரட்டை கொலையில் 5 பேர் குண்டாஸில் கைது
இரட்டை கொலையில் 5 பேர் குண்டாஸில் கைது
இரட்டை கொலையில் 5 பேர் குண்டாஸில் கைது
ADDED : பிப் 24, 2024 03:27 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பார்வதி நகரில் கடந்த டிச., 20ம் தேதி நள்ளிரவு பர்கத் மற்றும் சிவா ஆகிய இருவர் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக, 21 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், ஓசூர் ராம்நகர் ஏ.எஸ்.டி.சி., பள்ளம் பகுதியை சேர்ந்த நவாஷ், 38, சீத்தாராம் நகரை சேர்ந்த ஆபித், 24, ஆரிப், 22, ராம் நகரை சேர்ந்த முபாரக், 27, பார்வதி நகரை சேர்ந்த முனியப்பா, 33, ஆகிய ஐந்து பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி., தங்கதுரை பரிந்துரை செய்தார்.
அதையேற்று, அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் சரயு உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அதற்கான நகல் சேலம் சிறையில் உள்ள அவர்களிடம் வழங்கப்பட்டது.