/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ முடங்கியுள்ள 2 ஆர்.ஓ., நிலையங்கள் மக்கள் வரிப்பணம் வீண் என குற்றச்சாட்டு முடங்கியுள்ள 2 ஆர்.ஓ., நிலையங்கள் மக்கள் வரிப்பணம் வீண் என குற்றச்சாட்டு
முடங்கியுள்ள 2 ஆர்.ஓ., நிலையங்கள் மக்கள் வரிப்பணம் வீண் என குற்றச்சாட்டு
முடங்கியுள்ள 2 ஆர்.ஓ., நிலையங்கள் மக்கள் வரிப்பணம் வீண் என குற்றச்சாட்டு
முடங்கியுள்ள 2 ஆர்.ஓ., நிலையங்கள் மக்கள் வரிப்பணம் வீண் என குற்றச்சாட்டு
ADDED : மே 30, 2025 01:07 AM
கிருஷ்ணகிர :கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் பெத்ததாளாப்பள்ளி பஞ்., ஆனந்த நகர் உட்பட மாவட்டத்தில், 5 இடங்களில் தலா, 10 லட்சம் ரூபாய் என மொத்தம், 50 லட்சம் ரூபாய் மதிப்பில், சமூக நல நவீன சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது. எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, காங்., முன்னாள் எம்.பி., செல்லக்குமார் கடந்தாண்டு பிப்., 14ல், இந்த ஆர்.ஓ., நிலையங்களை திறந்து வைத்தார்.
இதில், ஒரு ரூபாய்க்கு, 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை தானியங்கி இயந்திரம் மூலம் பொதுமக்கள் பெற்று வந்தனர். புதிய பஸ் ஸ்டாண்டில் திறக்கப்பட்ட ஆர்.ஓ., குடிநீர் நிலையம், ஒரு மாதத்தில் முடங்கியது. பல முறை பொதுமக்கள் புகார் தெரிவித்தபின், ஆர்.ஓ., நிலையம் பராமரித்து இயக்கப்பட்டது. ஆனால் இந்த ஆர்.ஓ., நிலையம் இயங்குவதால் பஸ் ஸ்டாண்டில் கடை வைத்திருப்போருக்கு குடிநீர் பாட்டில் விற்பனை பாதிப்பதாக கூறி, ஆ.ஓ., நிலையத்தை மீண்டும் முடக்கி விட்டனர். இதனால் கடந்த, 10 மாதங்களாக, பஸ் ஸ்டாண்டிலுள்ள ஆர்.ஓ., நிலையம் பயன்பாடின்றி உள்ளது.அதேபோல், பெத்ததாளாப்பள்ளி பஞ்., ஆனந்தநகரில் திறக்கப்பட்ட ஆர்.ஓ., நிலையம், ஒரு வாரம் மட்டுமே இயங்கியது. இதனால், மக்களுக்கு கிடைத்து வந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தற்போது கிடைப்பதில்லை. 2 இடங்களில், 20 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த ஆர்.ஓ., நிலையங்கள், தற்போது பயன்பாடின்றி முடங்கியுள்ளதால், மக்களின் வரிப்பணம் வீணாகி உள்ளதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே இந்த, 2 ஆர்.ஓ., நிலையங்களை பராமரித்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.