/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/அகத்தீஸ்வர சுவாமி கோவிலில் 14ம் ஆண்டு வருஷாபிஷேக விழாஅகத்தீஸ்வர சுவாமி கோவிலில் 14ம் ஆண்டு வருஷாபிஷேக விழா
அகத்தீஸ்வர சுவாமி கோவிலில் 14ம் ஆண்டு வருஷாபிஷேக விழா
அகத்தீஸ்வர சுவாமி கோவிலில் 14ம் ஆண்டு வருஷாபிஷேக விழா
அகத்தீஸ்வர சுவாமி கோவிலில் 14ம் ஆண்டு வருஷாபிஷேக விழா
ADDED : ஜூலை 04, 2024 05:57 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த எம்.சி.,பள்ளியிலுள்ள ஆனந்தவல்லி அம்பிகா சமேத அகத்தீஸ்வர சுவாமி கோவிலின், 14ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்-துடன் துவங்கியது.
மாலை, ருத்ரயாகமும், நேற்று காலை, 6:00 மணிக்கு, கோ பூஜை, அகத்தி-யருக்கு பக்தர்களின் கைகளால் அபிஷேகம் நடந்தது. பின்னர், யோகினி சீதாம்மாவின் படத்-திறப்பு, அகத்தீஸ்வர சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. பகல், 12:00 மணிக்கு மகேஸ்வர பூஜை, மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்-தர்கள் கலந்து கொண்டனர். பின்னர், 500 சாதுக்களுக்கு அன்னம் வழங்கி, சிறப்பு பூஜை நடந்தது. மதியம், 1:00 மணிக்கு, அன்னதானம், சாதுக்களுக்கு வஸ்திர தானம் மற்றும் தட்சணை வழங்குதல், மாலை, 5:00 மணிக்கு, அம்மை அப்பனுக்கு திருக்கல்யாணம், இரவு, 8:00 மணிக்கு மேல், கல்யாண உற்சவம் நடந்தது. இதில், மகாராஜா - ராணி அலங்கா-ரத்தில், தாரை தப்பட்டை மற்றும் வாணவேடிக்-கையுடன் நகர்வலம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.