ADDED : ஜூன் 16, 2024 01:10 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பெத்தனப்பள்ளி அடுத்த பாறைகொட்டாயை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 19. இவர் அவதானப்பட்டியில் உள்ள, ஒரு கார் சர்வீஸ் சென்டரில் வேலை செய்து வந்தார். கடந்த, 12 மாலை அவர் மோட்டார் சுவிட்ச்சை போட சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சார ஒயரில், கை பட்டு மின்சாரம் தாக்கி இறந்தார். கே.ஆர்.பி. டேம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மனநலம் பாதிக்கப்பட்டவர் மாயம்
கிருஷ்ணகிரி: கர்நாடக மாநிலம், பெங்களூரை சேர்ந்தவர், அசோக், 40; சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த, 7ல் கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்ட் வந்த அவர், பஸ்சுக்கு அடியில் துாங்க சென்றுள்ளார். அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு, அவரது தம்பி ஆனந்த், 38, என்பவருக்கு தகவல் கொடுத்தனர். அவர் கிருஷ்ணகிரி வருவதற்குள் அசோக் மாயமானார். கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆசிரியர்களுக்கு பாராட்டு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், தேவீரஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு மாணவர்கள் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக, 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகின்றனர்.
இதையொட்டி பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், ஆசிரியர்களுக்கும், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் பாராட்டு விழா நடந்தது. பெற்றோர் ஆசிரியர் தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார்.
பொருளாளர் முனியன், துணைத் தலைவர்கள் முருகேசன், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஓய்வு பெற்ற மூத்த தமிழ் ஆசிரியர் ரமணன், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். உதவி தலைமை ஆசிரியர் மனோகரன் நன்றி கூறினார்.