/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மாங்கனி கண்காட்சி நடக்குமா? அதிருப்தியடைந்த விவசாயிகள் மாங்கனி கண்காட்சி நடக்குமா? அதிருப்தியடைந்த விவசாயிகள்
மாங்கனி கண்காட்சி நடக்குமா? அதிருப்தியடைந்த விவசாயிகள்
மாங்கனி கண்காட்சி நடக்குமா? அதிருப்தியடைந்த விவசாயிகள்
மாங்கனி கண்காட்சி நடக்குமா? அதிருப்தியடைந்த விவசாயிகள்
ADDED : ஜூலை 13, 2024 07:59 PM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில், அதிகளவில் மா சாகுபடி நடக்கிறது. மா விவசாயிகளை ஊக்குவிக்க கடந்த, 1992 முதல், அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும், கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடத்தப்பட்டு வந்த இந்த கண்காட்சிக்கு, கடந்த இரு ஆண்டுகளாக பிரச்னை இருந்தது.
நடப்பாண்டில் மாங்கனி கண்காட்சி நடத்த, கிருஷ்ணகிரி டோல்கேட் அருகிலுள்ள மைதானம் தேர்வு செய்து, அரங்குகள், கடைகள் அமைக்க இ - டெண்டர் விடப்பட்டது. அங்கு கண்காட்சி நடத்துவதால், தேசிய நெடுஞ்சாலையை கடந்து, மக்கள் வருவது சிரமம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் கண்காட்சியில், 'ஆளுங்கட்சியினர் சம்பாதிக்கும் வகையில், டெண்டர் விடவேண்டும். இ - டெண்டர் வைத்தால், வெளியூர்காரர்களுக்கு மட்டுமே லாபம் கிடைக்கும் என, தி.மு.க.,வினர் கூறுவதால் அதிகாரிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தற்போது, மா சீசனே முடிந்த நிலையில், மாங்கனி கண்காட்சி இன்னும் நடத்தவில்லை என, விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.