Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

ADDED : ஜூலை 14, 2024 02:08 AM


Google News
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட, ஒட்-டப்பட்டி பஞ்.,ல் உள்ள புளியாண்டப்பட்டி கிராமத்தில், 30,000 லிட்டர் அளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த, 2012 - 13ல் கட்டப்பட்டது. தற்போது வரை அப்பகுதியிலுள்ள, 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு, இந்த நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நீர்த்தேக்க

தொட்டியின், 4 துாண்களின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து வெடிப்புடனும், அதேபோல் நீர்த்தேக்க தொட்டியின் அடிப்பகு-தியில், கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு சிமென்ட்

பூச்சுகள் பெயர்ந்துள்ளது. இந்த சேதமான நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் இத்தொட்டியை கடந்த, 2 ஆண்டுகளுக்கு மேலாக சுத்தம் செய்யாமல் அப்படியே குடிநீர் வினியோகம் நடப்பதால், தண்ணீர் கலங்கலாக வருவ-தாக, கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சம்மந்தப்பட்ட அதி-காரிகள் உரிய நடவடிக்கை எடுக்க, அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us