/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ குடிநீர் வராததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் குடிநீர் வராததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
குடிநீர் வராததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
குடிநீர் வராததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
குடிநீர் வராததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
ADDED : ஜூன் 19, 2024 02:11 AM
மொரப்பூர், மொரப்பூர் அருகே, குடிநீர் வராததை கண்டித்து, காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த எம்.வெளாம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட பள்ளிப்பட்டியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஆழ்துளை கிணற்றில் இருந்து, மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, அதிலிருந்து குடிநீர் வினியோகம் நடக்கிறது.
இந்நிலையில், மின்மோட்டார் பழுதால் கடந்த, 2 நாட்களாக குடிநீர் வினியோகம் நடக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பள்ளிப்பட்டி கிராம மக்கள் நேற்று காலை, 11:00 மணிக்கு, மருதிப்பட்டி - தொட்டம்பட்டி சாலையில், வெளாம்பட்டி பஸ் நிறுத்தத்தில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த பஞ்., தலைவர் சாந்தி கமலேசன், மொரப்பூர் எஸ்.எஸ்.ஐ., ராஜேந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சில மணி நேரத்திற்குள் பழுதடைந்த மின்மோட்டார் சரி செய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள், 11:30 மணிக்கு கலைந்து சென்றனர்.