/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ திருவிழா பேனர் கிழித்தோர் மீது நடவடிக்கை கோரி முற்றுகை திருவிழா பேனர் கிழித்தோர் மீது நடவடிக்கை கோரி முற்றுகை
திருவிழா பேனர் கிழித்தோர் மீது நடவடிக்கை கோரி முற்றுகை
திருவிழா பேனர் கிழித்தோர் மீது நடவடிக்கை கோரி முற்றுகை
திருவிழா பேனர் கிழித்தோர் மீது நடவடிக்கை கோரி முற்றுகை
ADDED : ஜூன் 19, 2024 02:11 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த பனந்தோப்பு பகுதியில், இரு தரப்பை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். பனந்தோப்பு மாரியம்மன் தோவில் பண்டிகை நேற்று நடந்தது. இதற்காக ஒரு தரப்பினர் தெருக்களில் பேனர் வைத்துள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர், கத்தியுடன் வந்து பேனர்களை கிழித்துள்ளனர்.
இது குறித்து நடவடிக்கை கோரி, 100க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., தமிழரசி, மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., ரவிக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால், ஸ்டேஷனை முற்றுகையிட்ட மக்கள், சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை இன்ஸ்பெக்டர்கள் குலசேகரன், செந்தில்குமார், வெங்கடேஷ் பிரபு மற்றும் ஆயுதப்படை போலீசார், 50க்கும் மேற்பட்டோர் அப்புறப்படுத்தினர்.
பேனர் கிழித்த விவகாரத்தில், 'சிசிடிவி' காட்சி மற்றும் புகார் அடிப்படையில் பசுபதி, 24, ஸ்ரீ, 22, சக்திவேல், 24, ஹரிபிரசாத், 22 ஆகியோரை கைது செய்த போலீசார், மேலும், 7 பேரை தேடி வருகின்றனர்.