/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பெண் தொழிலாளிக்கு கத்திக்குத்து கள்ளக்காதலன் போலீசில் சரண் பெண் தொழிலாளிக்கு கத்திக்குத்து கள்ளக்காதலன் போலீசில் சரண்
பெண் தொழிலாளிக்கு கத்திக்குத்து கள்ளக்காதலன் போலீசில் சரண்
பெண் தொழிலாளிக்கு கத்திக்குத்து கள்ளக்காதலன் போலீசில் சரண்
பெண் தொழிலாளிக்கு கத்திக்குத்து கள்ளக்காதலன் போலீசில் சரண்
ADDED : ஜூலை 14, 2024 02:09 AM
ஓசூர்: ஓசூர் அருகே, பெண் தொழிலாளியை கத்தியால் குத்திய கள்ளக்-காதலன் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பெலத்துாரை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் மனைவி வினோதம்மா, 40. தோட்ட வேலை செய்து வருகிறார்; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த உடன் வேலை செய்யும் குணசேகர், 31, என்பவருக்கும் கடந்த, 7 ஆண்-டுகளாக தொடர்பு இருந்து வந்தது. கடந்த, 4 ஆண்டுக்கு முன், வேறொரு பெண்ணை குணசேகர் திருமணம் செய்தார். அதன் பின் வினோதம்மா மற்றும் குணசேகர் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், பெலத்துார் ஏரிக்கரையில் வயிறு, கழுத்து மற்றும் கை ஆகிய இடங்களில் வெட்டு மற்றும் குத்து காயங்களுடன், நேற்று வினோதம்மா உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, பாகலுார் ஸ்டேஷனில் குணசேகர் சரணடைந்தார். அவர், வினோ-தம்மா தன்னை மீண்டும் கள்ளத்தொடர்புக்கு வற்புறுத்தியதால், அவரை குத்தியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடி வரும் வினோதம்மா, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாகலுார் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.