/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 2 மனைவியருடன் கொள்ளையன் கைது 47 பவுன் நகை, ரூ.1.76 லட்சம் பறிமுதல் 2 மனைவியருடன் கொள்ளையன் கைது 47 பவுன் நகை, ரூ.1.76 லட்சம் பறிமுதல்
2 மனைவியருடன் கொள்ளையன் கைது 47 பவுன் நகை, ரூ.1.76 லட்சம் பறிமுதல்
2 மனைவியருடன் கொள்ளையன் கைது 47 பவுன் நகை, ரூ.1.76 லட்சம் பறிமுதல்
2 மனைவியருடன் கொள்ளையன் கைது 47 பவுன் நகை, ரூ.1.76 லட்சம் பறிமுதல்
ADDED : ஜூலை 18, 2024 01:29 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்-களை திசை திருப்பி கொள்ளையடித்தவர் தன், 2 மனைவிக-ளுடன் கைது செய்யப்பட்டார். அவர்களிடமிருந்து, 47 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், 1.76 லட்சம் ரூபாய் மற்றும் 20 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக, பஸ்சில் பயணம் செய்பவர்களிடமிருந்து தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டதாக ஏராள-மான புகார்கள் போலீசாருக்கு சென்றன. மாவட்ட எஸ்.பி., தங்க-துரை உத்தரவுப்படி, அந்த கொள்ளையர்களை பிடிக்க தனிப்-படை அமைக்கப்பட்டது.
போலீசார், 'சிசிடிவி' காட்சிகளை வைத்து ஆய்வு செய்து சிலரை சந்தேகப்பட்டனர். போலீசார் சந்தேக பட்டியலில் இருந்த ஒரு வாலிபர், 2 பெண்களுடன் கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்டில் சுற்றி-யது தெரிந்தது. நேற்று முன்தினம் மாலை, அந்த வாலிபர், 2 பெண்களுடன் கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில் நின்றபோது போலீசார் வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள், திருப்-பத்துார் டவுனை சேர்ந்தவர்கள் என்பதும் கடந்த, 10 ஆண்டுக-ளாக கிருஷ்ணகிரி அருகே உள்ள பாஞ்சாலியூர் கிராமத்தில் வீடு வாடகை எடுத்து தங்கியுள்ள சக்தி, 37, அவரது, 2 மனைவிக-ளான அமுதா, 36, நந்தினி, 30 என்பதும் தெரியவந்தது.
அவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமி-ருந்து, 47 பவுன் நகைகள், 67,500 ரூபாய் மதிப்பிலான வெள்ளி பொருட்கள், 20 மொபைல் போன்களுடன், 1.76 லட்சம் ரூபா-யையும் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.