ADDED : ஜூலை 18, 2024 01:29 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், கோவை சங்கரா அறக்கட்டளை மற்றும் அரிமா சங்கம் இணைந்து கண் சிகிச்சை முகாமை நடத்தியது.
டிரஸ்ட் தலைவர் பாண்டுரங்கன் தலைமை வகித்தார். அரிமா சங்க மாவட்ட தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். இதில், கலந்து கொண்டவர்களுக்கு சங்கரா கண்ணொளி மைய கண் மருத்துவ உதவியாளர் காயத்ரி மற்றும் மருத்துவக் குழு-வினர், பரிசோதனை செய்தனர்.