/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ வீடுகளில் இயங்கும் அரசு பள்ளி சொந்த கட்டடம் கேட்டு மறியல் வீடுகளில் இயங்கும் அரசு பள்ளி சொந்த கட்டடம் கேட்டு மறியல்
வீடுகளில் இயங்கும் அரசு பள்ளி சொந்த கட்டடம் கேட்டு மறியல்
வீடுகளில் இயங்கும் அரசு பள்ளி சொந்த கட்டடம் கேட்டு மறியல்
வீடுகளில் இயங்கும் அரசு பள்ளி சொந்த கட்டடம் கேட்டு மறியல்
ADDED : ஆக 07, 2024 08:57 AM
ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், கிரியானப்பள்ளியில், அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 75 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இரு ஆண்டுகளுக்கு முன், பள்ளியின் ஓடு கட்டடம் சேதமானது.
மேலும், சுவர் இடிந்ததால் கழிப்பறையையும் பயன்படுத்த முடியாமல் மாணவியர் அவதி அடைந்தனர். இதனால், கடந்த இரு ஆண்டுகளாக அப்பகுதியிலுள்ள வீடுகளின் வராண்டாக்களில் மாணவ - மாணவியருக்கு பாடம் நடத்தப்படுகிறது.
பள்ளிக்கு சொந்த கட்டடம் கேட்டு பெற்றோர் கோரிக்கை விடுத்தும், மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை கண்டுகொள்ளவில்லை. இதனால் நேற்று காலை, 10:00 மணிக்கு மாணவ - மாணவியர், 50க்கும் மேற்பட்டோர், வகுப்புகளை புறக்கணித்து மறியல் செய்தனர்.
தேன்கனிக்கோட்டை தாசில்தார் பரிமேலழகர், டி.எஸ்.பி., சாந்தி பேச்சு நடத்தி, புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதையடுத்து மறியலை கைவிட்டு, காலை, 11:30 மணிக்கு பின் மாணவ - மாணவியர் பள்ளிக்கு சென்றனர்.