/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ போட்டி தேர்வு கருத்தரங்கில் மாணவ, மாணவியர் பங்கேற்பு போட்டி தேர்வு கருத்தரங்கில் மாணவ, மாணவியர் பங்கேற்பு
போட்டி தேர்வு கருத்தரங்கில் மாணவ, மாணவியர் பங்கேற்பு
போட்டி தேர்வு கருத்தரங்கில் மாணவ, மாணவியர் பங்கேற்பு
போட்டி தேர்வு கருத்தரங்கில் மாணவ, மாணவியர் பங்கேற்பு
ADDED : ஜூலை 09, 2024 10:58 PM
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காமராஜ் காலனியிலுள்ள நுாலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் நுால்களை படித்து, மாணவ - மாணவியர் பலர், அரசின் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.
அவர்களுக்கு, 'போட்டி தேர்வுகளில் நாளிதழ்களின் பங்கு' என்பது குறித்த கருத்தரங்கம் நேற்று நடந்தது. ஓசூர் மக்கள் சங்கம் முன்னாள் தலைவர் சரவணன், தலைவர் பிரசாத் தலைமை வகித்தனர்.
ஓசூர் மாநகராட்சி கமிஷனரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி சினேகா மற்றும் ஐ.ஆர்.எஸ்., அதிகாரி கிருத்திக் ஆகியோர், 'போட்டி தேர்வுகளில் தினசரி நாளிதழ்களின் பங்கு' என்ன என்பது குறித்து, மாணவ - மாணவியருக்கு விளக்கினர்.
கமிஷனர் சினேகா பேசும்போது, 365 நாட்களும் நாளிதழ்களை படிக்க வேண்டும். ஓரிரு நாட்கள் படித்து விட்டுவிட கூடாது. முக்கியமான தகவல்களை படித்து அறிந்து கொள்ள, மாணவ - மாணவியருக்கு அறிவுறுத்தினார். ஓய்வுபெற்ற சப் - கலெக்டர் பிரபாகர் மற்றும் 40க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.