/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஓசூர் மலைக்கோவில் உண்டியல்கள் திறப்பு ஓசூர் மலைக்கோவில் உண்டியல்கள் திறப்பு
ஓசூர் மலைக்கோவில் உண்டியல்கள் திறப்பு
ஓசூர் மலைக்கோவில் உண்டியல்கள் திறப்பு
ஓசூர் மலைக்கோவில் உண்டியல்கள் திறப்பு
ADDED : ஜூன் 19, 2024 02:07 AM
ஓசூர், ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக ஆங்காங்கு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. கடைசியாக கடந்த ஜன., 9ல் கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.
தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் கோவில் தேர்த்திருவிழா நடந்தது. அதன் பின் முக்கிய விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், கோவில் உண்டியல்கள் நிறைந்தன. அதனால், ஹிந்து சமய அறநிலையத்துறை உயரதிகாரிகளிடம் அனுமதி கேட்கப்பட்டு, கோவிலில் உள்ள மொத்தம், 8 உண்டியல்கள் நேற்று திறந்து காணிக்கைகள் எண்ணப்பட்டன.
செயல் அலுவலர்கள் சின்னசாமி, சிவா ஆகியோர் முன்னிலையில், தன்னார்கள், முதியவர்கள், கோவில் ஊழியர்கள் என பலர், உண்டியல் காணிக்கையை எண்ணினர். அதில் மொத்தம், 26.65 லட்சம் ரூபாய் மற்றும் 33 கிராம் தங்கம், 300 கிராம் வெள்ளி இருந்தன. அவற்றை கோவில் நிர்வாகம் பாதுகாப்புடன் வங்கியில் செலுத்த எடுத்துச்
சென்றது.