/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கி.கிரி மாவட்டத்தில் நாளை கோமாரி நோய் தடுப்பூசி பணி கி.கிரி மாவட்டத்தில் நாளை கோமாரி நோய் தடுப்பூசி பணி
கி.கிரி மாவட்டத்தில் நாளை கோமாரி நோய் தடுப்பூசி பணி
கி.கிரி மாவட்டத்தில் நாளை கோமாரி நோய் தடுப்பூசி பணி
கி.கிரி மாவட்டத்தில் நாளை கோமாரி நோய் தடுப்பூசி பணி
ADDED : ஜூன் 09, 2024 04:28 AM
கிருஷ்ணகிரி: தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தில், கோமாரி நோய் தடுப்பூசிப்பணி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும், 10 முதல் (நாளை) துவங்கப்பட உள்ளது. இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட கலெக்டர் சரயு தலைமையில் துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது.
கோமாரி நோய் தடுப்பூசிப்பணியின், 5வது சுற்று, நாளை தொடங்கப்பட்டு, 30 நாட்கள் தொடர்ச்சியாக நடக்க உள்ளது. முகாமிற்கு தேவையான தடுப்பூசி மருந்துகள், மாவட்ட முழுவதிற்கும் போதுமான அளவு இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. முகாம் நடக்கும் கிராமங்களில் கால்நடை வளர்ப்போரிடம் முகாம் நடப்பது தொடர்பாகவும், தடுப்பூசி போடுவதால் உண்டாகும் பயன்கள் குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, தொடர்புத்துறை அலுவலர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஓசூர் மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயணி, டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், ஓசூர் சப் கலெக்டர் பிரியங்கா, கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., பாபு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.