ADDED : ஜூன் 18, 2024 11:30 AM
ஊத்தங்கரை: ஊத்தங்கரை ரவுண்டானா வில் மா.கம்யூ., கட்சி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதில், நெல்லை மாவட்டத்தில் ஜாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக, கொலை வெறியோடு தேடிய கும்பல், மா.கம்யூ., கட்சி அலுவலகத்தை சூறையாடியதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்ட செயலாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன் பேசினார். இதில், சிங்காரப்பேட்டை பகுதி செயலாளர் சபாபதி, வட்ட செயலாளர்கள் போச்சம்பள்ளி தாமு, பர்கூர் சீனீவாசன், மாவட்ட குழு உறுப்பினர் அண்ணாமலை, வட்டகுழு உறுப்பினர்கள் முத்துகுமார், எத்திராஜ் உட்பட, கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.