/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தேசன்ன, தோரள்ளி சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா தேசன்ன, தோரள்ளி சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா
தேசன்ன, தோரள்ளி சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா
தேசன்ன, தோரள்ளி சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா
தேசன்ன, தோரள்ளி சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : ஜூன் 18, 2024 11:29 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த கோனேரிப்பள்ளி அருகே குண்டுகுறுக்கி கிராமத்தில், பழமையான தேசன்ன சுவாமி மற்றும் தோரள்ளி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைப்பு செய்யப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி, நேற்று முன்தினம் இரவு கோவில் முன், கிராம தெய்வங்களுக்கு வழிபாடுகள் நடத்தப்பட்டு, பாரம்பரிய முறைப்படி, தலைமீது தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. சுவாமிக்கு விரதமிருந்த பக்தர்கள், தலைமீது தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று காலை கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, சுவாமி கண் திறப்பு நடந்தது.
அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., மற்றும் காமன்தொட்டி, கோனேரிப்பள்ளி, பிள்ளைகொத்துார், கோட்ராலப்பள்ளி, குருபசப்படி, பங்காநத்தம், சாமல்பள்ளம், இருதாளம் உட்பட பல்வேறு கிராம மக்கள் சுவாமி
தரிசனம் செய்தனர்.