/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ போதையில் காரை ஓட்டி சென்ற 2 போலீசார் உள்பட நால்வர் கைது போதையில் காரை ஓட்டி சென்ற 2 போலீசார் உள்பட நால்வர் கைது
போதையில் காரை ஓட்டி சென்ற 2 போலீசார் உள்பட நால்வர் கைது
போதையில் காரை ஓட்டி சென்ற 2 போலீசார் உள்பட நால்வர் கைது
போதையில் காரை ஓட்டி சென்ற 2 போலீசார் உள்பட நால்வர் கைது
ADDED : ஜூலை 28, 2024 04:06 AM
கிருஷ்ணகிரி: போதையில் காரை ஓட்டிச் சென்ற இரு போலீசார் உள்பட, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி எஸ்.பி., முகாம் அலுவலகம் அருகே, நேற்று முன்-தினம் எஸ்.எஸ்.ஐ., திருமால் மற்றும் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது, அவ்வழியாக மாருதி பிரீஷா கார் வேகமாக சென்றது. காரை மறித்து போலீசார் விசாரித்தனர். அதில், காரில் இருந்த நால்வரும் மதுபோதையில் இருந்தது தெரிந்தது. விசாரணையில், அவர்களில் இருவர் போலீசார் என்-பது தெரிந்தது. இதையடுத்து ஆயுதப்படை போலீசார் அச்செட்-டிப்பள்ளி நவீன்குமார், 29, கல்லாவி புருஷோத்தமன், 32, இன்-ஜினியர்கள் ஓசூர் முனிசேகர், 27, பரத்குமார், 26, ஆகிய நால்வ-ரையும் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் கைது செய்தனர்.