/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பாசன நீர் 17 நாட்களுக்கு பின் திறப்பு வலது கால்வாய் விவசாயிகள் நிம்மதி பாசன நீர் 17 நாட்களுக்கு பின் திறப்பு வலது கால்வாய் விவசாயிகள் நிம்மதி
பாசன நீர் 17 நாட்களுக்கு பின் திறப்பு வலது கால்வாய் விவசாயிகள் நிம்மதி
பாசன நீர் 17 நாட்களுக்கு பின் திறப்பு வலது கால்வாய் விவசாயிகள் நிம்மதி
பாசன நீர் 17 நாட்களுக்கு பின் திறப்பு வலது கால்வாய் விவசாயிகள் நிம்மதி
ADDED : ஜூலை 28, 2024 04:11 AM
ஓசூர்: ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து, 17 நாட்களுக்கு பின் பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டதால், வலது கால்வாய் விவசா-யிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணையில் இருந்து, வலது கால்வாயில், 26 கன அடியும், இடது கால்வாயில், 62 கன அடியும் என மொத்தம், 88 கன அடி நீரை முதல்போக பாசனத்திற்கு கடந்த, 10ல் மாவட்ட கலெக்டர் சரயு, கிருஷ்ணகிரி எம்.பி., கோபிநாத் ஆகியோர் திறந்து வைத்தனர். இதன் மூலம், 21 கி.மீ., நீளமுள்ள வலது கால்வாயில், 2,082 ஏக்கரும், 25 கி.மீ., நீளமுள்ள இடது கால்வாயில், 5,918 ஏக்-கரும் பாசன வசதி பெறும் என்பதால், 22 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், அணையில் இருந்து வலது கால்வாயில் திறக்கப்-பட்ட, 26 கன அடி நீர், அன்றைய தினமே சில மணி நேரத்தில் நிறுத்தப்பட்டது. இது விவசாயிகளை அதிர்ச்சியடைய செய்தது. வலது கால்வாயில் சீரமைப்பு பணிகள் நடப்பதாக கூறி, பாசன நீரை நீர்வளத்துறை நிறுத்தியது. இதனால் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டனர். இந்நிலையில், கெலவ-ரப்பள்ளி அணையில் இருந்து, 17 நாட்களுக்கு பின், நேற்று வலது கால்வாயில், 26 கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.