/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ அடிப்படை வசதியை நிறைவேற்ற வலியுறுத்தி இ.கம்யூ., ஆர்ப்பாட்டம் அடிப்படை வசதியை நிறைவேற்ற வலியுறுத்தி இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
அடிப்படை வசதியை நிறைவேற்ற வலியுறுத்தி இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
அடிப்படை வசதியை நிறைவேற்ற வலியுறுத்தி இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
அடிப்படை வசதியை நிறைவேற்ற வலியுறுத்தி இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 24, 2024 02:13 AM
கிருஷ்ணகிரி:பர்கூர் வட்டார மக்களின் அடிப்படை வசதியை உடனே நிறைவேற்றக்கோரி, பர்கூர் தாலுகா அலுவலகம் முன்பு, இ.கம்யூ., கட்சி மற்றும் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
கட்சியின் வட்ட செயலாளர் வெங்கடேசன், பாரதிய கெத் மஸ்துார் யூனியன் வட்ட செயலாளர் பூபேஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். இ.கம்யூ., மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி, மாநிலக்குழு உறுப்பினர் கண்ணு, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சேகர் ஆகியோர் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், நீண்ட நாட்களாக வீடுகள் கட்டி குடியிருந்து வரும் வீடுகளுக்கு, இலவச வீட்டு மனைப்பட்டாவை உடனே வழங்க வேண்டும். 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்கள் அனைவருக்கும், ஓய்வூதியம் வழங்க வேண்டும். சிகரலப்பள்ளி பஞ்.,த்தில் உள்ள கோத்தலகுட்டை கூட்ரோடு மக்களுக்கு குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும். பர்கூர் வட்டத்திலுள்ள, அனைத்து கிராமங்களுக்கும் சீரான ஒகேனக்கல் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீர் சாக்கடை கலந்த பர்கூர் ஆற்றை சுத்தம் செய்து, மக்களுக்கு நோய் பரவாமல் இருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.