/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ சர்வீஸ் சாலையில் ஆண்டுக்கணக்கில் ஓடும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி சர்வீஸ் சாலையில் ஆண்டுக்கணக்கில் ஓடும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி
சர்வீஸ் சாலையில் ஆண்டுக்கணக்கில் ஓடும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி
சர்வீஸ் சாலையில் ஆண்டுக்கணக்கில் ஓடும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி
சர்வீஸ் சாலையில் ஆண்டுக்கணக்கில் ஓடும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி
ADDED : ஜூலை 24, 2024 02:12 AM
கிருஷ்ணகிரி:காட்டு ஆஞ்சநேயர் கோவில் மேம்பாலம் அருகில் சர்வீஸ் சாலையில் ஆண்டுக்கணக்கில் ஓடும் கழிவுநீரால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி, காட்டு ஆஞ்சநேயர் கோவில் மேம்பாலம் அருகில், சர்வீஸ் சாலையோரம் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சாக்கடை கால்வாய் உள்ளது. இதில் பல ஆண்டுகளாக அடைப்பு ஏற்பட்டுள்ளதால், ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி உள்ளது. இக்கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதி முழுவதும் பரவி உள்ளது. மேலும், கால்வாயில் கழிவுநீர் செல்ல வழியின்றி, ஆண்டுக் கணக்கில் சர்வீஸ் சாலையில் ஓடுகிறது. இதனால் தினமும், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'ஆண்டுக்கணக்கில் தேங்கிய கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகிறது. சம்பாதிக்கும் பாதி பணம், கொசு மருந்து வாங்கவே போதவில்லை. இது குறித்து புகார் தெரிவித்தால், ஒரு நாள் மட்டும் கழிவுநீரை அகற்றுகின்றனர். ஆனால், எப்போதும் இங்கு கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, கழிவுநீர் சீராக வெளியேற தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் பஞ்., நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.