/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பருவமழை முன்னேற்பாடு, டெங்கு தடுப்பு பணி மேற்கொள்ள ஆலோசனை கூட்டம் பருவமழை முன்னேற்பாடு, டெங்கு தடுப்பு பணி மேற்கொள்ள ஆலோசனை கூட்டம்
பருவமழை முன்னேற்பாடு, டெங்கு தடுப்பு பணி மேற்கொள்ள ஆலோசனை கூட்டம்
பருவமழை முன்னேற்பாடு, டெங்கு தடுப்பு பணி மேற்கொள்ள ஆலோசனை கூட்டம்
பருவமழை முன்னேற்பாடு, டெங்கு தடுப்பு பணி மேற்கொள்ள ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூலை 21, 2024 10:54 AM
கிருஷ்ணகிரி: பருவமழை மற்றும் டெங்கு நோய் தடுப்பு பணிகள் குறித்த முன்னேற்பாடுகள் மற்றும் தயார் நிலை பணிகள் குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வருவாய், போலீஸ், தீயணைப்பு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி, மருத்துவத் துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாவட்ட கலெக்டர் சரயு தலைமை வகித்து பேசுகையில், “பருவமழை முன்னேற்பாடு பணிகளிலும், கொசு ஒழிப்பு பணியிலும் அலுவலர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும். பொதுமக்களுக்கு காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் ஏதேனும் கண்டறியப்பட்டால், சுயமாக மருந்து உட்கொள்ளாமல், அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, பதிவு பெற்ற மருத்துவ அலுவலரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
அதே போல் தனியார் மருந்து கடை உரிமையாளர்கள் மருத்துவரின் ஆலோசனைகள் இல்லாமல், மருந்து, மாத்திரைகள் வழங்கக்கூடாது. பொதுமக்கள் காய்ச்சிய குடிநீரை பருக வேண்டும்,” என்றார். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர்.ரமேஷ்குமார், கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., பாபு, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.