/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பயன்பாட்டில் இல்லாத வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் சமூக விரோத செயல்கள் பயன்பாட்டில் இல்லாத வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் சமூக விரோத செயல்கள்
பயன்பாட்டில் இல்லாத வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் சமூக விரோத செயல்கள்
பயன்பாட்டில் இல்லாத வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் சமூக விரோத செயல்கள்
பயன்பாட்டில் இல்லாத வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் சமூக விரோத செயல்கள்
ADDED : ஜூன் 11, 2024 01:54 PM
ஓசூர்: ஓசூர் தேர்ப்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள், சமூக விரோத செயல்களின் கூடாரமாகி உள்ளதால், அக்கட்டடங்களை இடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேர்ப்பேட்டையில், 50 ஆண்டுக்கு முன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. மிக மோசமான நிலையை எட்டிய இக்கட்டடங்கள், கடந்த, 20 ஆண்டுக்கும் மேலாக பயன்பாட்டில் இல்லை. அவற்றை இடிக்காமல் அப்படியே விட்டுள்ளதால், அங்கு சமூக விரோதிகள் மது அருந்தவும், போதை பொருட்களை பதுக்கி வைக்கவும், சமூக விரோத செயல்களுக்கும் பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. மேலும், இங்கு பல்வேறு வாகனங்களில் வந்து செல்லும் சமூக விரோதிகளால், அருகே இயங்கி வரும் சூடவாடி அரசு மாநகராட்சி துவக்கப்பள்ளியில் படிக்கும், 480 மாணவ, மாணவியர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இதை தடுக்க, பயன்பாட்டில் இல்லாத வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை இடிக்க, அப்பகுதியினர் அதிகாரிகளிடம், மாநகராட்சி நிர்வாகத்திடமும் மனு கொடுத்தும், இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக இக்கட்டங்களை இடிக்க நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.