Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஒற்றை யானை தாக்கி வனக்காவலர் படுகாயம்

ஒற்றை யானை தாக்கி வனக்காவலர் படுகாயம்

ஒற்றை யானை தாக்கி வனக்காவலர் படுகாயம்

ஒற்றை யானை தாக்கி வனக்காவலர் படுகாயம்

ADDED : ஜூலை 26, 2024 03:35 AM


Google News
ஓசூர்: ஓசூர் வனப்பகுதிக்கு உட்பட்ட, சூளகிரி அடுத்த மேலுமலை வனப்பகுதியில், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வனப்பகுதியி-லிருந்து வெளியேறிய ஆண் யானை ஒன்று சுற்றித்திரிகிறது.

அதை ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு விரட்ட, ராயக்கோட்டை வனச்சரகத்தை சேர்ந்த, 15க்கும் மேற்பட்ட வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் முயன்று வருகின்றனர்.

நேற்று காலை சாமல்பள்ளம் அருகில் ஓட்டயனுாரில் சுற்றித்தி-ரிந்த யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, வனக்காவலர் நரசிம்மன், 50, வனக்காப்பாளர் முருகேசன் ஆகி-யோரை யானை தாக்க முயன்றது. முருகேசன் தப்பிய நிலையில், நரசிம்மனை, யானை காலால் உதைத்து சென்றது.

இதில் படுகாயமடைந்த அவரை மீட்ட வனத்துறையினர், கிருஷ்-ணகிரி

அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட வன

அலுவலர் கார்த்திகேயினி மற்றும் வனத்துறையினர் விரைந்து, மக்களை அப்பகுதிக்கு வரவேண்டாம் என எச்சரித்தனர். தொடர்ந்து, ஒற்றை யானையை விரட்டும் பணியில்

ஈடுபட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us