/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ இருவேறு சாலை விபத்தில் 2 வாலிபர்கள் உட்பட 3 பேர் பலி இருவேறு சாலை விபத்தில் 2 வாலிபர்கள் உட்பட 3 பேர் பலி
இருவேறு சாலை விபத்தில் 2 வாலிபர்கள் உட்பட 3 பேர் பலி
இருவேறு சாலை விபத்தில் 2 வாலிபர்கள் உட்பட 3 பேர் பலி
இருவேறு சாலை விபத்தில் 2 வாலிபர்கள் உட்பட 3 பேர் பலி
ADDED : ஜூன் 11, 2024 06:08 PM
ஓசூர்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கொப்பக்கரையை சேர்ந்தவர் ராஜதுரை, 25; ஓசூருக்கு வேலை தேடி வந்தவர், ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் ஊர் திரும்பினார். அவருடன், ஓசூர் கிருஷ்ணா நகரை சேர்ந்த சுரேஷ், 35, என்பவரும் சென்றார். ராஜதுரை பைக்கை ஓட்டினார். சூளகிரி அடுத்த சாமல்பள்ளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால வேலைகள் நடப்பதால், சர்வீஸ் சாலை அமைத்து, வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
இதில் நேற்று மதியம், 1:00 மணிக்கு சென்றபோது, முன்னால் சென்ற கன்டெய்னர் லாரியின் பின்புறத்தில் பைக் மோதியது. இதில், துாக்கி வீசப்பட்ட இருவரும், லாரியின் பின்புற சக்கரத்தில் சிக்கி, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
ஓசூர், நரசம்மா காலனியை சேர்ந்தவர் அணில்குமார், 48; கிரானைட் தொழில் செய்து வந்தார். நேற்று மதியம், 1:00 மணிக்கு, ஓசூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் மீது, ஹோண்டா சைன் பைக்கில் சென்றார். அப்போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.