/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 13 ஏக்கர் நிலம் விற்பதாக ரூ.1.50 கோடி மோசடி 13 ஏக்கர் நிலம் விற்பதாக ரூ.1.50 கோடி மோசடி
13 ஏக்கர் நிலம் விற்பதாக ரூ.1.50 கோடி மோசடி
13 ஏக்கர் நிலம் விற்பதாக ரூ.1.50 கோடி மோசடி
13 ஏக்கர் நிலம் விற்பதாக ரூ.1.50 கோடி மோசடி
ADDED : ஜூன் 11, 2024 08:41 PM
கிருஷ்ணகிரி:ஓசூர் அருகே, 13 ஏக்கர் நிலத்தை விற்பதாக, 1.50 கோடி ரூபாய் மோசடி நடந்ததாக கூறி, பாதிக்கப்பட்ட, 40க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகார் மனுவில் தெரிவித்துள்ளதாவது:
ஓசூர், ரங்கோபண்டித அக்ரஹாரத்தை சேர்ந்தவர் ராமானுஜம். இவர் தன்னிடமுள்ள, 13 ஏக்கர் நிலத்தை, பிளாட்டுகளாக விற்பதாக கூறி, எங்களிடம், 5 லட்சம் முதல், 7 லட்சம் ரூபாய் வரை வாங்கினார். நிலத்தை விஜயகுமார் என்ற புரோக்கர் வாயிலாக உங்களுக்கு கொடுக்கிறேன் எனவும் கூறினார். அதற்காக, அவரது நிலத்தை விஜயகுமார் பெயரில், பொது அதிகார ஆவணத்தையும் வழங்கினார்.
அதை நம்பி, 40க்கும் மேற்பட்டோர், 1.50 கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்தோம். இந்நிலையில், விஜயகுமாருக்கு வழங்கிய, 'பவர் ஆப் அட்டர்னி'யை ராமானுஜம் ரத்து செய்து, வேறொருவருக்கு நிலத்தை கிரயம் செய்து விட்டார். எங்களுக்கு நிலம் விற்பதாக கூறி ராமானுஜம் ஏமாற்றி உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம்.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.