ADDED : மார் 23, 2025 01:04 AM
ஓசூரில் கன மழை
ஓசூர்:வெயில் வாட்டி வரும் நிலையில், நேற்று மாலை, 6:45 மணிக்கு மேல், ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. வெயிலின் தாக்கம் தணிந்து, இதமான காற்று வீசியதால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், தொடர் கோடை மழையை எதிர்பார்த்து மக்களும், மானாவாரி சாகுபடி விவசாயிகளும் உள்ளனர்.