/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ சேலத்திற்கு காரில் கடத்திய72 கிலோ குட்கா பறிமுதல் சேலத்திற்கு காரில் கடத்திய72 கிலோ குட்கா பறிமுதல்
சேலத்திற்கு காரில் கடத்திய72 கிலோ குட்கா பறிமுதல்
சேலத்திற்கு காரில் கடத்திய72 கிலோ குட்கா பறிமுதல்
சேலத்திற்கு காரில் கடத்திய72 கிலோ குட்கா பறிமுதல்
ADDED : மார் 13, 2025 01:55 AM
சேலத்திற்கு காரில் கடத்திய72 கிலோ குட்கா பறிமுதல்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி எஸ்.எஸ்.ஐ., ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை சோமநாதபுரம் மேம்பாலம் பக்கமாக வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த டொயேட்டோ இட்டியோஸ் காரை நிறுத்தினர். போலீசாரை பார்த்தவுடன் காரை நிறுத்திய டிரைவர் இறங்கி தப்பி ஓடி விட்டார். காரை சோதனையிட்டதில், 72 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது. விசாரணையில் பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு புகையிலை பொருட்களை கடத்த முயன்றது தெரிந்தது. இதையடுத்து போலீசார் காரையும், 72 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு, 2.51 லட்சம் ரூபாய். குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.