/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கிருஷ்ணகிரி மாவட்டத்தில்நேற்றும் பரவலாக மழை கிருஷ்ணகிரி மாவட்டத்தில்நேற்றும் பரவலாக மழை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்நேற்றும் பரவலாக மழை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்நேற்றும் பரவலாக மழை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்நேற்றும் பரவலாக மழை
ADDED : மார் 13, 2025 01:55 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்நேற்றும் பரவலாக மழை
கிருஷ்ணகிரி:தென்மேற்கு வங்கக்கடல் பகுதியின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, காவேரிப்பட்டணம் உட்பட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது.
நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம், 3:00 மணிக்கு, போச்சம்பள்ளி, மஞ்சமேடு, கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு பகுதிகளில் லேசான துாரல் முதல் மிதமான மழை பெய்தது.
சில இடங்களில் அதிக காற்றுடன் மழை பெய்ததால், மாமரங்களில் பிஞ்சுகள் உதிர்ந்தன. 2வது நாளாக பரவலாக பெய்த மழையால், வெப்பத்தின் தாக்கம் சற்று தணிந்து குளிர்ந்த சீதோஷ்ணம் நிலவியது.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக பாரூரில், 21.20 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அதே போல், நெடுங்கல், 19.20, பெணுகொண்டாபுரம், 17.20, ஊத்தங்கரை, 17, பாம்பாறு அணை, 15.20, போச்சம்பள்ளி, 14.30, கிருஷ்ணகிரி, 4.20, ராயக்கோட்டை, 3, கிருஷ்ணகிரி அணை, 1.40 என மொத்தம், 112.70 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நேற்றுடன், 3வது நாளாக நீர்வரத்து பூஜ்ஜியமாக இருந்தது.