Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தமிழக எல்லை சோதனைச்சாவடியில் ரெய்டு கணக்கில் வராத ரூ.2.25 லட்சம் பறிமுதல்

தமிழக எல்லை சோதனைச்சாவடியில் ரெய்டு கணக்கில் வராத ரூ.2.25 லட்சம் பறிமுதல்

தமிழக எல்லை சோதனைச்சாவடியில் ரெய்டு கணக்கில் வராத ரூ.2.25 லட்சம் பறிமுதல்

தமிழக எல்லை சோதனைச்சாவடியில் ரெய்டு கணக்கில் வராத ரூ.2.25 லட்சம் பறிமுதல்

ADDED : ஜூலை 06, 2024 08:48 AM


Google News
ஓசூர் : தமிழக எல்லையான ஓசூர் சோதனைச்சாவ-டியில் நடந்த, லஞ்ச ஒழிப்பு போலீசார் சோத-னையில் கணக்கில் வராத, 2.25 லட்சம் ரூபாய் சிக்கியது.

தமிழக எல்லையான, ஓசூர் ஜூஜூவாடி தேசிய நெடுஞ்சாலையோரம், போக்குவரத்து சோத-னைச்சாவடி (உள்வழி) இயங்கி வருகிறது. இங்கு, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும், பாடி கட்டாத வாகனங்களுக்கு வரி விதிக்கப்படுகிறது.

மேலும், தனியார் கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் டாடா ஏஸ் போன்ற சிறிய அளவிலான சரக்கு வாகனங்களுக்கு பர்மிட் வழங்குவது; அதிக லோடு ஏற்றி செல்லும் வாக-னங்களுக்கு அபராதம் விதிப்பது போன்ற பணி-களை, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மேற்-கொள்கின்றனர்.

பர்மிட், அபராதம், வரி விதிப்பு போன்ற பணிக-ளுக்கு, கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்வதாக, மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசா-ருக்கு புகார் சென்றன. இதையடுத்து, டி.எஸ்.பி., வடிவேல் தலைமையிலான போலீசார் நேற்று காலை, 6:10 மணிக்கு சோதனைச்சாவடியில் சோதனை செய்தனர். அப்போது கணக்கில் வராமல், 2 லட்சத்து, 25 ஆயிரத்து, 950 ரூபாய் இருந்தது.

பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் நிர்மல்குமாரிடம் விசாரித்தனர். அவரிடம் சரி-யான கணக்கு இல்லாததால், பணத்தை பறி-முதல் செய்த போலீசார் மதியம், 1:00 மணிக்கு சோதனையை முடித்து கொண்டனர். இதைய-டுத்து, மோட்டார் வாகன ஆய்வாளர் நிர்மல்-குமார் மற்றும் ஊழியர்கள் மீது, துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

* ஜூஜூவாடியில் உள்ள மற்றொரு சோதனைச்-சாவடி (வெளி வழி) மற்றும் பாகலுார் சாலையில் உள்ள போக்குவரத்து சோதனைச்சாவடியிலும், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்-டிருந்தால், கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் சிக்கியிருக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us