/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மின்சாரம் தாக்கி கோவில் பூசாரி பலி மின்சாரம் தாக்கி கோவில் பூசாரி பலி
மின்சாரம் தாக்கி கோவில் பூசாரி பலி
மின்சாரம் தாக்கி கோவில் பூசாரி பலி
மின்சாரம் தாக்கி கோவில் பூசாரி பலி
ADDED : மார் 14, 2025 01:47 AM
மின்சாரம் தாக்கி கோவில் பூசாரி பலி
கிருஷ்ணகிரி:தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளியை சேர்ந்தவர் மாதையன், 45. இவர், பாரூர் அருகே உள்ள மொழிவயனுார் முனியப்பன் கோவில் பூசாரியாக இருந்தார். கடந்த, 12 காலை கோவிலில் பூஜை செய்ய சென்றார். கோவிலின் பின்புறமாக இருந்த, இரும்பு ஷீட்டை அவர் தொட்டபோது அதில் கசிந்த மின்சாரம் தாக்கியதில், மாதையன் சம்பவ இடத்திலேயே பலியானார். பாரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
* கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பண்ணந்துாரை சேர்ந்தவர் கிளியம்மாள், 70. இவர், பசு மாடுகளை வளர்க்கிறார். நேற்று முன்தினம் பண்ணந்துார் பகுதியில் பெய்த மழையால், அப்பகுதி மின்கம்பத்தில் மின்கசிவு இருந்துள்ளது. அந்த வழியாக பசுமாட்டை கிளியம்மாள் ஓட்டி வரும்போது, மின்சாரம் தாக்கியதில் பசுமாடு பலியானது. பாரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.