/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கோழி இறைச்சி பதப்படுத்தும் நிறுவனகழிவுநீரால் நிலத்தடி நீர் மாசு என புகார் கோழி இறைச்சி பதப்படுத்தும் நிறுவனகழிவுநீரால் நிலத்தடி நீர் மாசு என புகார்
கோழி இறைச்சி பதப்படுத்தும் நிறுவனகழிவுநீரால் நிலத்தடி நீர் மாசு என புகார்
கோழி இறைச்சி பதப்படுத்தும் நிறுவனகழிவுநீரால் நிலத்தடி நீர் மாசு என புகார்
கோழி இறைச்சி பதப்படுத்தும் நிறுவனகழிவுநீரால் நிலத்தடி நீர் மாசு என புகார்
ADDED : மார் 14, 2025 01:47 AM
கோழி இறைச்சி பதப்படுத்தும் நிறுவனகழிவுநீரால் நிலத்தடி நீர் மாசு என புகார்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பசுமை தாயகம் அமைப்பின் மாவட்ட செயலாளர் சந்திரசேகர் தலைமையில், 10க்கும் மேற்பட்டோர், மாவட்ட கலெக்டர் தினேஷ்குமாரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம், பச்சிகானப்பள்ளி பஞ்., கொத்துப்பள்ளி கிராமத்தில், அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், துடுக்கனஹள்ளி, முத்துரான் கொட்டாய், பச்சிக்கானப்பள்ளி உட்பட, 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளி அருகே, கோழி இறைச்சியை பதப்படுத்தும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதிலிருந்து வெளியேறும் கழிவுகள், சுத்திகரிக்கப்படாமல், சாலையோரமுள்ள மாந்தோட்டத்தில் வெட்டிய பள்ளத்தில் அப்படியே விடப்படுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. மேலும், சாலையோரம் தேங்கும் இறைச்சி கழிவுநீரால், நிலத்தடி நீர் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆழ்துளை கிணறுகளில் இருந்து வரும் தண்ணீர் துர்நாற்றம் வீசுவதுடன், செடிகளுக்கு பாய்ச்ச முடியாத நிலை காணப்படுகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம், கோழி இறைச்சி பதப்படுத்தும் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு, முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா எனவும், கழிவுகளை சுகாதாரமற்ற முறையில் வெளியேற்றுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.