/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தொடர் கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர் கைது தொடர் கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர் கைது
தொடர் கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர் கைது
தொடர் கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர் கைது
தொடர் கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர் கைது
ADDED : செப் 10, 2025 02:08 AM
குளித்தலை குளித்தலை பகுதியில், தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து, 11 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.
குளித்தலை உட்கோட்ட கிராம பகுதிகளில் கடந்த, 2024ம் ஆண்டு தொடர்ந்து சில நாட்களாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வந்தன. குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில், எஸ்.ஐ., சரணவகிரி, எஸ்.எஸ்.ஐ.,க்கள் ராஜேந்திரன், செல்வம் ஆகியோர் இரவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வேகமாக சென்றவரின் பைக்கை நிறுத்தி, போலீசார் சோதனை செய்தனர். விசாரணையில் அவர், கருங்களாபள்ளியை சேர்ந்த ராமன் மகன் பாரதிதாசன், 23, என்பதும், இவர் கிராமப்
புறங்களில் தனிமையாக இருக்கும் வீடுகளில் பல திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து கருங்களா
பள்ளி செந்தில்குமார் என்பவர் வீட்டில், 4 பவுன் தங்கச்செயின், மைலாடி சுப்பிரமணியன் என்பவர் வீட்டில், 3 பவுன் செயின், பணிக்கம்பட்டி மோகன்தாஸ் என்பவரது வீட்டில், 4 பவுன் என, மொத்தம் 11 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்ததாக பாரதிதாசன் ஒப்புக்கொண்டார். பின்னர், கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை பறிமுதல் செய்து, அவர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து, கைது செய்து குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.