/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மகிளிப்பட்டி சாலையில் குழாய் உடைந்து வீணாகி செல்லும் நீர் மகிளிப்பட்டி சாலையில் குழாய் உடைந்து வீணாகி செல்லும் நீர்
மகிளிப்பட்டி சாலையில் குழாய் உடைந்து வீணாகி செல்லும் நீர்
மகிளிப்பட்டி சாலையில் குழாய் உடைந்து வீணாகி செல்லும் நீர்
மகிளிப்பட்டி சாலையில் குழாய் உடைந்து வீணாகி செல்லும் நீர்
ADDED : செப் 10, 2025 02:08 AM
கிருஷ்ணராயபுரம், மகிளிப்பட்டி வழியாக செல்லும், மதுரை-மேலுார் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் பெரிய குழாய் உடைந்து, தண்ணீர் சாலையில் செல்லும் அவல நிலை ஏற்பட்டது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி காவிரி ஆற்றில் இருந்து, மதுரை மாவட்டம் மேலுார் வரை காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டம் மூலம், சிந்தலவாடி காவிரி ஆற்றில் இருந்து மகிளிப்பட்டி சாலை வழியாக மேலுார் வரை குழாய் பாதிக்கப்பட்டு, அதன் மூலம் காவிரி நீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம், நீர் செல்லும் போது அழுத்தம் காரணமாக, மகிளிப்பட்டி சாலையில் பெரிய குழாய் உடைப்பு ஏற்பட்டது. உடைந்த குழாய் வழியாக, சென்ற அதிகமான தண்ணீர் சாலை நடுவில் பெரிய பள்ளத்தில் தேங்கியதால் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மகிளிப்பட்டி லாலாப்பேட்டை வழியாக செல்ல மக்கள் அவதிப்பட்டனர். எனவே, உடைந்த காவிரி குடிநீர் திட்ட குழாயை சரி செய்ய, வாரிய நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.