/உள்ளூர் செய்திகள்/கரூர்/ காரில் தேசியக்கொடி கட்டிய வாலிபர் கைது காரில் தேசியக்கொடி கட்டிய வாலிபர் கைது
காரில் தேசியக்கொடி கட்டிய வாலிபர் கைது
காரில் தேசியக்கொடி கட்டிய வாலிபர் கைது
காரில் தேசியக்கொடி கட்டிய வாலிபர் கைது
ADDED : மே 25, 2025 01:32 AM
கரூர்,கரூரில், தேசியக்கொடியை காரில், கட்டிக்கொண்டு சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கரூர் டவுன் போலீஸ் எஸ்.ஐ., முத்துசாமி உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் மதியம், கரூர் மனோகரா கார்னர் ரவுண்டானா பகுதியில், பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருச்சி மாவட்டம், முசிறி எம்.கருப்பம்பட்டி பகுதியை சேர்ந்த சிவக்குமார், 35, என்பவர் அவரது டிரைபர் ரெனால்ட் காரில், தேசியக்கொடியை கட்டியிருந்தார். இதுகுறித்து, எஸ்.ஐ., முத்துசாமி அளித்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் சிவக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.