ADDED : மே 25, 2025 01:32 AM
கரூர்,கரூரில், கூலி தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.கரூர், காமராஜர் சாலையை சேர்ந்தவர் விஸ்வநாதன், 23, கூலி தொழிலாளி. இவர் கடந்த, 22ல் இரவு மக்கள் பாதை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்த தமிழழகன், 30, என்பவர் விஸ்நாதனிடம் கத்தியை காட்டி மிரட்டி, 500 ரூபாயை பறித்துள்ளார். இதுகுறித்து, விஸ்வநாதன் அளித்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் தமிழழகனை கைது செய்தனர்.