/உள்ளூர் செய்திகள்/கரூர்/இளம் பெண் மாயம்; போலீசில் தந்தை புகார்இளம் பெண் மாயம்; போலீசில் தந்தை புகார்
இளம் பெண் மாயம்; போலீசில் தந்தை புகார்
இளம் பெண் மாயம்; போலீசில் தந்தை புகார்
இளம் பெண் மாயம்; போலீசில் தந்தை புகார்
ADDED : ஜூலை 10, 2024 06:57 AM
கரூர்: கரூரில், டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்த, இளம் பெண்ணை காணவில்லை.
கரூர் மாவட்டம், மணவாசி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த நடராஜ் என்பவரது மகள் ஆர்த்தி, 23; கரூரில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த, 7 ல் வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறி விட்டு, சென்ற ஆர்த்தி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த ஆர்த்தியின் தந்தை நடராஜ் போலீசில் புகார் செய்தார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.