/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சின்னதாராபுரம் அரசு மகளிர் பயிற்சி நிறுவனத்தில் சேர விண்ணப்பிக்கலாம் சின்னதாராபுரம் அரசு மகளிர் பயிற்சி நிறுவனத்தில் சேர விண்ணப்பிக்கலாம்
சின்னதாராபுரம் அரசு மகளிர் பயிற்சி நிறுவனத்தில் சேர விண்ணப்பிக்கலாம்
சின்னதாராபுரம் அரசு மகளிர் பயிற்சி நிறுவனத்தில் சேர விண்ணப்பிக்கலாம்
சின்னதாராபுரம் அரசு மகளிர் பயிற்சி நிறுவனத்தில் சேர விண்ணப்பிக்கலாம்
ADDED : மே 31, 2025 06:34 AM
கரூர்: சின்னதாராபுரம், அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர, விரும்புபவர்கள் ஜூன், 6 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, பயிற்சி நிறுவன முதல்வர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், கரூர் மாயனுார் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ், சின்னதாராபுரம் அரசு மகளிர் பயிற்சி நிறுவனம் செயல்படுகிறது.
இந்த நிறுவனத்தில், 2025-26ம் ஆண்டில் முதலாம் ஆண்டு மாணவியர் சேர்க்கை கடந்த, 26 முதல் தொடங்கி நடந்து வருகிறது. அதில், சேர விரும்பும் மாணவியர் வரும் ஜூன், 6க்குள் விண்ணப்பிக்க வேண்டும். http//scert.tnschools.gov என்ற இணையதளத்திலும், நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம்.
பொதுப்பிரிவை சேர்ந்தவர்கள், 500 ரூபாயும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாணவியர், 250 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும், விபரங்களுக்கு பயிற்சி நிறுவனத்தை, 97892-90855 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, செய்திக்
குறிப்பில் கூறப்பட்டுள்ளது.