உலக ஓசோன் தின விழிப்புணர்வு பேரணி
உலக ஓசோன் தின விழிப்புணர்வு பேரணி
உலக ஓசோன் தின விழிப்புணர்வு பேரணி
ADDED : செப் 18, 2025 02:17 AM
கரூர் :தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் துறை மற்றும் கரூர் மாவட்ட தேசிய பசுமை படை சார்பில், உலக ஓசோன் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி, மணவாசியில்
நடந்தது.
கிருஷ்ணராயபுரம் பஞ்., யூனியன் மணவாசி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை, தலைமையாசிரியை தேன்மொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவியர் புகை வெளியிடுதலை கட்டுப்படுத்த வேண்டும், மின்சாரத்தை சிக்னமாக பயன்படுத்த வேண்டும், குப்பைகளை எரிக்காமல் அப்புறப்படுத்த வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கொண்டு சென்றனர்.
பேரணியில், தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி, பசுமை தோழர் ஐஸ்வரியா, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.