ADDED : செப் 19, 2025 01:37 AM
கிருஷ்ணராயபுரம், வேங்காம்பட்டி கிராமத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை முன்னிட்டு துாய்மை பணி நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்துார் பஞ்சாயத்து, வேங்காம்பட்டி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடக்கிறது. இதில், பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்று, மக்களிடம் மனுக்கள் பெறுகின்றனர். இதற்காக முகாம் நடக்கும் பகுதியில், கருப்பத்துார் பஞ்சாயத்து சார்பில் துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. நுாலக சாலை பகுதி முழுதும் பொக்லைன் கொண்டு, முள் செடிகளை அகற்றி, குப்பைகளை அள்ளி சென்றனர்.