/உள்ளூர் செய்திகள்/கரூர்/ டிரைவருக்கு உருட்டு கட்டை அடி: கூலி தொழிலாளி கைது டிரைவருக்கு உருட்டு கட்டை அடி: கூலி தொழிலாளி கைது
டிரைவருக்கு உருட்டு கட்டை அடி: கூலி தொழிலாளி கைது
டிரைவருக்கு உருட்டு கட்டை அடி: கூலி தொழிலாளி கைது
டிரைவருக்கு உருட்டு கட்டை அடி: கூலி தொழிலாளி கைது
ADDED : ஜூலை 02, 2025 02:28 AM
கரூர், உப்பிடமங்கலம், டாஸ்மாக் மதுபான கடை அருகே, குடி போதையில் டிரைவரை உருட்டு கட்டையால் அடித்த, கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுாரை சேர்ந்தவர் வீரக்குமார், 35, டிரைவர். இவர் கடந்த, 29ம் தேதி இரவு கரூர் அருகே உப்பிடமங்கலத்தில், டாஸ்மாக் மதுபான கடை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, உப்பிடமங்கலம் வடக்கு பகுதியை சேர்ந்த, கூலி தொழிலாளி கோபிநாத், 35, என்பவர் குடி போதையில் தகாத வார்த்தை பேசியபடி, வீரக்குமாரை உருட்டு கட்டையால் அடித்துள்ளார். இதில் காயமடைந்த வீரக்குமார் அளித்த புகார்படி, வெள்ளியணை போலீசார் வழக்கு பதிந்து கோபிநாத்தை கைது செய்தனர்.