/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சுகாதார வளாகம் அருகே தேங்கிய கழிவுநீரை அகற்றும் பணி மும்முரம் சுகாதார வளாகம் அருகே தேங்கிய கழிவுநீரை அகற்றும் பணி மும்முரம்
சுகாதார வளாகம் அருகே தேங்கிய கழிவுநீரை அகற்றும் பணி மும்முரம்
சுகாதார வளாகம் அருகே தேங்கிய கழிவுநீரை அகற்றும் பணி மும்முரம்
சுகாதார வளாகம் அருகே தேங்கிய கழிவுநீரை அகற்றும் பணி மும்முரம்
ADDED : செப் 02, 2025 12:52 AM
குளித்தலை;பொது சுகாதார வளாகம் அருகே, தேங்கியிருந்த கழிவுநீர் வடிகால் துார் வாரும் பணியில் துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்., மேட்டுமருதுார், பொது சுகாதார வளாகம் எதிரில் உள்ள வடிகாலில் கழிவுநீர் தேக்கமடைந்து, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாக, நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து, மருதுார் டவுன் பஞ்., (பொ) செயல் அலுவலர் காந்தரூபன் உத்தரவின்படி, சுகாதார மேற்பார்வையாளர் பாக்கியம் மேற்பார்வையில், துாய்மை பணியாளர்கள் மூலம் தேங்கிய கழிவுநீரை வெளியேற்றினர். பின்னர், நோய் தடுப்பு நடவடிக்கையாக பிளீச்சிங் பவுடர் துாவும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பொது சுகாதார வளாகத்தில் தேங்கிய செப்டிக் டேங்க் கழிவுகளை வாகனம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.