ADDED : ஜூலை 16, 2024 01:48 AM
கரூர்: சின்னதாராபுரம் அருகே, மனைவியை காணவில்லை என, போலீசில் கணவர் புகார் செய்துள்ளார்.கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் நடந்தை பகுதியை சேர்ந்-தவர் பழனிசாமி, இவரது மனைவி நேத்ராவதி, 28; இவர் கடந்த மாதம், 26ல் வீட்டில் இருந்து, க.பரமத்தி உள்ள மருத்துவம-னைக்கு சென்றுள்ளார்.
ஆனால் வீடு திரும்பவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கும், நேத்ராவதி செல்ல-வில்லை. இதுகுறித்து, கணவர் பழனிசாமி கொடுத்த புகார்படி, சின்னதா-ராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.