/உள்ளூர் செய்திகள்/கரூர்/ குடிநீர் குழாய் உடைப்பு வீணாக வெளியேறும் நீர் குடிநீர் குழாய் உடைப்பு வீணாக வெளியேறும் நீர்
குடிநீர் குழாய் உடைப்பு வீணாக வெளியேறும் நீர்
குடிநீர் குழாய் உடைப்பு வீணாக வெளியேறும் நீர்
குடிநீர் குழாய் உடைப்பு வீணாக வெளியேறும் நீர்
ADDED : ஜூன் 01, 2025 01:45 AM
கரூர், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், பாலராஜபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட ஆண்டிபாளையத்தில், பஞ்., சார்பில் பொது குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. அதில், ஏராளமானோர் தண்ணீர் பிடித்து வருகின்றனர். தற்போது பிளாஸ்டிக் குழாய் உடைந்து விட்டதால், குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. வீணாகும் நீர் செல்ல வடிகால் வசதி இல்லை.
பல நாட்களாக நீர் தேங்கியதால், கழிவுநீராக மாறி துர்நாற்றம் வீசுகிறது. குடிநீர் பற்றாக்குறை நிலவும் சூழ்நிலையில், ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகி செல்கிறது. பொது குடிநீர் குழாயை சீரமைத்து, கழிவுநீர் செல்லும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.