/உள்ளூர் செய்திகள்/கரூர்/ 'பூத் நிர்வாகிகளுடன் இணைந்து இளைஞரணி பணியாற்ற அறிவுரை' 'பூத் நிர்வாகிகளுடன் இணைந்து இளைஞரணி பணியாற்ற அறிவுரை'
'பூத் நிர்வாகிகளுடன் இணைந்து இளைஞரணி பணியாற்ற அறிவுரை'
'பூத் நிர்வாகிகளுடன் இணைந்து இளைஞரணி பணியாற்ற அறிவுரை'
'பூத் நிர்வாகிகளுடன் இணைந்து இளைஞரணி பணியாற்ற அறிவுரை'
ADDED : ஜூன் 01, 2025 01:44 AM
கரூர், ''பூத் நிர்வாகிகளுடன், இளைஞரணி நிர்வாகிகள் இணைந்து பணியாற்ற வேண்டும்,'' என, தி.மு.க., மாவட்ட செயலர் செந்தில்பாலாஜி பேசினார்.
கரூரில், தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது. மாநில இளைஞரணி துணை செயலரும், ஈரோடு எம்.பி.,யுமான பிரகாஷ் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட செயலர் செந்தில்பாலாஜி பேசியதாவது:
கரூர் மாவட்டத்தில், 22 சார்பு அணிகளில் மட்டும், 5,000 பேர் உள்ளனர். இதன்படி, ஒரு பூத்துக்கு சராசரியாக ஐந்து பேர் வருவர்.
இவர்கள், பூத் நிர்வாகிகளிடம் இணைந்து பணியாற்ற வேண்டும். கடந்த தேர்தலில், நான்கு தொகுதிகளில் தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது.
வரும் தேர்தலிலும், அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். உங்கள் பகுதியில் உள்ள அடிப்படை தேவைகளில், குறைபாடுகள் குறித்து தகவல் தெரிவித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு பேசினார்.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.