/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
ADDED : செப் 01, 2025 02:19 AM
கரூர்:கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம், 11,288 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 14,751 கன அடியாக அதிகரித்தது. அதில், டெல்டா மாவட்டங்களில், சாகுபடிக்காக காவிரியாற்றில், 13,251 கன அடியும், தென்கரை வாய்க்காலில், 650 கன அடி தண்ணீரும், கீழ் கட்டளை வாய்க்காலில், 300 கன அடி தண்ணீரும், புதிய கட்டளை வாய்க்காலில், 350 கன அடியும், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், 20 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
ஆத்துப்பாளையம் அணைக.பரமத்தி அருகே, கார் வாழி ஆத்துப்பாளையம் அணையில், நேற்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 10.04 அடியாக இருந்தது. அணையில் இருந்து, நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.